Vethathiriya Gnanakkudil
Vethathiriya Gnanakkudil
June 11, 2025 at 01:56 AM
11-06-2025 *அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்* ❓ *கேள்வி: சுவாமிஜி! ஜீவகாந்தத்திற்கு மூலம் வான்காந்தம் என்று சொல்கிறீர்களே, அதற்கு என்ன ஆதாரம்?* ✅ *பதில்:* இந்தப் பிரபஞ்சம் முழுவதும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது “மகாகாசம்”, இதுதான் வான் காந்தக்களம் என்பது. அதே ஆகாசத் துகள்கள் பொருட்களில் மடிந்தியங்கும்போது அதைப் “பூதாகாசம்” என்று சொல்கிறோம். அதுவே உயிர்களின் உடலில் எல்லைகட்டி இயங்கும்போது அதைச் “சித்தாகாசம்” என்கிறோம். சித்து என்றால் உயிர் என்று பொருள். ஆகாசத்துகள் அல்லது விண்துகள் என்ற சுழலலையிலிருந்து வருகின்ற விரிவலை சுத்தவெளியோடு மோதும் போது தோன்றும் அடிப்படைச் சக்தி “வான்காந்தம்”. அதுவே திணிவு பெற்று ஜீவன்களில் செயல்படும்போது அதை “ஜீவகாந்தம்” என்கிறோம். எப்படி கடல் நீர் கிணற்று நீருக்கு ஆதாரமாக இருக்கிறதோ, அதேபோல் வான்காந்தமே ஜீவகாந்தத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. வான்காந்தம் பேரியக்க மண்டலம் முழுவதும் நிறைந்திருக்கிறது. உணவு, தண்ணீர் உட்கொண்டு மூச்சுவாங்கி விட்டுக் கொண்டேயிருக்கும் உயிரினங்கள் அனைத்தும் வான்காந்தத்தை உள்வாங்கி உடலியக்கம், இன்பதுன்பம், யூகம் எனும் மன இயக்கம் இவற்றை முறையாக நடத்தி சீவகாந்தத்தை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் இவையாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. வாழ்க வளமுடன்! *அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி* (நாளையும் தொடரும்) K.Pudur MVKM Trust, Madurai - https://twitter.com/VethathiriGnana ✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana 🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907 📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/ 🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil 🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01 📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏 👍 4

Comments