Vethathiriya Gnanakkudil
Vethathiriya Gnanakkudil
June 17, 2025 at 01:33 AM
17-06-2025 *அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்* ❓ *கேள்வி: ஐயா! தங்களுக்கு “வேதாத்திரி” என்ற பெயர் பெற்றோர்கள் வைத்த பெயரா அல்லது ஆன்மீகத் துறையில் வந்த பிறகு வைத்துக் கொண்டீர்களா?* ✅ *பதில்:* எனக்கு பெற்றோர்கள் வைத்த பெயரே அதுதான். ஒருநாள் சாது ஒருவர் இரவு வேளையில் எங்கள் இல்லத்திற்கு வந்துள்ளார். வழக்கம்போல் வந்த விருந்தினரை உபசரித்த என் பெற்றோர்கள் ஏழ்மையிலும் தங்களுக்குள்ள எளிய உணவை அவருக்குக் கொடுத்து உபசரித்துள்ளனர். அப்பொழுது உள்ளே குழந்தை அழும் குரல் கேட்டிருக்கிறது. அதை விசாரித்த பெரியவரிடம் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் ஒர் ஆண்மகவு பிறந்துள்ளதை என் தாயார் கூறியுள்ளார். உடனே அந்த பெரியவர் குழந்தைக்கு “வேதாத்திரி” என்று பெயர் வையுங்கள் என்று கூறினாராம். இரவில் தின்னையில் தங்கிய அவரை காலையில் மேலும் விசாரிக்க என் பெற்றோர்கள் பார்த்த பொழுது அவர் அந்த இடத்தை விட்டுப் போய் விட்டார். அவரைக் காணவில்லையாம். பிறகு அவர் சொன்னபடியே “வேதாத்திரி” என்ற பெயரையே எனக்கு என் பெற்றோர்கள் சூட்டினார்களாம். இது பிற்காலத்தில் என் தாயார் எனக்குக் கூறியது. வாழ்க வளமுடன்! *அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி* (நாளையும் தொடரும்) ✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana 🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907 📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/ 🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil 🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01 📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏 ❤️ 8

Comments