
Vethathiriya Gnanakkudil
June 21, 2025 at 12:38 AM
21-06-2025
*அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*
❓ *கேள்வி: சுவாமிஜி! மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம் இணைய வேண்டிய அத்தியாவசியம் என்ன?*
✅ *பதில்:* புலணுணர் பொருட்களைப் பகுத்துப் பிரித்துக் கூர்ந்து அறிவது விஞ்ஞானம். புலன்களுக்கு எட்டாத இறைநிலை, நுண்பொருளான விண் எனும் உயிர்த்துகள், காந்த அலையாகிய மனம் இம்மூன்றையறிவது மெய்ஞ்ஞானம்.
மெய்ஞ்ஞானம் இல்லாத விஞ்ஞானமும், விஞ்ஞானம் இல்லாத மெய்ஞ்ஞானமும் முழுமை பெறா. மெய்ஞ்ஞானத்தை புறக்கணித்த விஞ்ஞானம் மனித வாழ்வில் வளத்தை அழிக்கும்; மனிதகுலத்தை அழிக்கும் கருவிகளை உற்பத்தி செய்யத் தூண்டும்; மனித மனத்தைத் தவறான பாதையில் திருப்பும்.
மெய்ஞ்ஞானத்தோடு இணைந்த விஞ்ஞானம் வாழ்வில் நலம் காணும். மனித வாழ்வு வளம்பெற மெய்ஞ்ஞானமும் வேண்டும். விஞ்ஞானமும் வேண்டும். இரண்டும் இணைந்து ஒன்றுபட்டு மனிதகுல வாழ்விற்குப் பயனாக வேண்டியது இக்காலத்தின் தேவையாகி விட்டது. “விஞ்ஞானம் இல்லாத மெய்ஞ்ஞானம் குருடு, மெய்ஞ்ஞானம் இல்லாத விஞ்ஞானம் நொண்டி” என்ற கருத்து உற்று நோக்கத்தக்கது.
வாழ்க வளமுடன்!
*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*
(நாளையும் தொடரும்)
✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana
🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil
🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏
1