Para
June 16, 2025 at 11:06 PM
அன்பிற்கினிய பாரா,
நீ வேறு நான் வேறு. 19. என் பார்வையில்,
திடீரென 2013 நிகழ்வுகளுக்கு எம்மை கூட்டிச் செல்வீர் என எதிர்பார்க்கவில்லை,
அத்தியாயத்தின் கடைசியில் தான் புரிந்தது.ஆசான் முன்கூட்டியே அச்சம்பவத்தை விவரித்ததற்கான காரணமும் விளங்கியது,
130 ஆண்டுகளாக அணையாமல் இருந்த பலூச்சிகளின் கொதிப்பை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் தான் என புரிகிறது ஆசான்,
பாகிஸ்தானிகளுக்கு பலூச்சிகளின் செய்தி என்னவெனில்
ஜின்னா என்கிற பாக் தந்தையை தாங்கள் கொண்டாட வேண்டிய அவசியமில்லை என்பதாகும்,
தாக்குதலுக்கு உள்ளாகிய மாளிகை பற்றிய விளக்கம் மாளிகை யை கண் முன்னே கொண்டு வந்தது உண்மையே,
அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தி விட்டீர் ஆசான் ,
1947 ல் படைகளை அனுப்பி பலூசிஸ்தானை வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுடன் இணைத்தது ஜின்னா எனும் மனிதரின் துரோகமே காரணம் என பலூச்சிகள் நம்பினர் .
ஐய்யா😜மீண்டும் 1940 க்கு நிகழ்வுகளை தெரிந்து கொள்ள செல்வோம் ..
வினோத்குமார் சுப்ரமணியன்.