Para
June 17, 2025 at 11:09 AM
அன்பின் பா.ரா. அவர்களுக்கு வணக்கம்,
கலாட் மன்னர் மிர் அஹ்மத்யார் கான் ஜின்னா மீது ஆதீத நட்புடன் அல்லவா இருந்திருக்கிறார். ஆசிரியர் எழுதியிருப்பதைப் பார்த்தால் கானின்
நட்பு என்று தனியாக ஒரு நாவல் வந்தாலும் வரலாம்.
தற்கால அரசியலில் குறுந்தலைவர்கள் தம் தலைவர்களுக்கு தரும் கவனிப்பு போல் அல்லவா
இருந்திருக்கிறது.எப்படியெல்லாம் வரவேற்பு. பாதுகாப்பு. விருந்து உபசரிப்பு. ஜின்னாவின் சகோதரிக்கு கூட பாகுபாடு இல்லாத கவனிப்பு. கவனித்துப் பார்த்தால் இவை எல்லாவற்றிற்கும் ஜின்னா தகுதியுடையவர்தான்.ஏழு வருடங்களாக ஜின்னா மீது எப்படியான நட்பினை பாராட்டியிருக்கிறார்.
ஜின்னாவிற்கு கலாட் மன்னரை ஏமாற்ற வேண்டும்
என்ற எண்ணம் கிடையாது. ஆனால் முஸ்லீம்களுக்கான தனி நாடு வேண்டும் என்பது
மட்டுமே அவர் குறிக்கோள். இதை பிரிட்டிஷார்
நன்கு புரிந்து வைத்துள்ளனர்.
ஜின்னா சட்டம் படித்தவர் சட்ட நுணுக்கங்களை
அறிந்தவர் பிரிட்டிஷாருடன் பேச்சுவார்த்தை நடத்தி
தமக்கு நல்லதே செய்வார் என்று கருதி தமது ராஜ்ஜியத்திற்கு சட்ட ஆலோசகராக இருக்குமாறு
வேண்டிக் கொண்டதெல்லாம் நடந்தது.
ஜின்னாவும் அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை
முடித்து விடலாம் என்று உறுதியளித்து விட்டார்.
ஆனால் முடித்து வைக்க வேண்டியவர்கள் பிரிட்டிஷார்
அல்லவா?
பதவி கிட்டவில்லை என்றபோதுஒருஇயக்கத்திலிருந்து
வெளியேறினவர். மனம் கவர்ந்த மகாத்மாவை துறந்தவர். கலாட் மன்னர் அவரை நம்பினார்.
அவ்வளவுதான்.
பாபநாசம் நடராஜன்