Para
June 17, 2025 at 02:07 PM
நீ வேறு, நான் வேறு 21 - வாசிப்பு அனுபவம்
உண்மையில் பலூசிஸ்தான் ஒரு விநோதம் தான். இராணுவத்தில் சேர வேண்டுமா? சேர்க்கிறோம். உங்கள் எதிரிகளுடன் சண்டையிட வேண்டுமா? சண்டையிடுகிறோம். இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? எல்லாம் செய்கிறோம். ஒன்று மட்டும் வேண்டும். இல்லை. அதுவும் வேண்டாம். பேசாமல் போய் விடுங்கள். நாங்கள் சுதந்திர நாடாக இருந்துகொள்கிறோம். அல்லது தன்னாட்சி பிராந்தியமாகவாவது இருக்க விடுங்கள். எங்களுக்கு சுதந்திரம் வேண்டும். அவ்வளவுதான். அதுமட்டும் தான் வேண்டும்.
ஆனால் பிரிட்டனின் மௌனம் அச்சுறுத்தலானது. இந்திய பிராந்தியத்தில் மத்திய கிழக்குக்கு எல்லையாக அமைந்தது பலூசிஸ்தானின் பிரச்சினையா? அதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்? இரண்டாம் உலகப்போரில் இஸ்ரேல் காட்டிய விசுவாசத்திற்கு நன்றிக் கடன் செலுத்திய பிரிட்டன், பலூசிஸ்தானை கைவிட்டது முரண் தான். இந்தப் பக்கம் யாரது? ஜின்னாவா? என்னய்யா உங்களுக்குப் பிரச்சினை? தனி முஸ்லிம் நாடா? வாங்கிக் கொள்ளுங்கள். நாங்களா? நாங்கள் பலூச்சிகள். ஆங். முஸ்லிம்கள் தான். ஆனால் ஒன்று. நாங்கள் முஸ்லிம்கள் என்பதால் பலூச்சிகள் இல்லை. பலூச்சிகள் என்பதால் முஸ்லிம்கள். உணர்ந்தார்களா உரியவர்கள்?
காத்திருப்புடன்
சிகரம் பாரதி
இலங்கை
மலையகம்.
👍
1