Para
June 18, 2025 at 02:09 AM
நீ வேறு நான் வேறு 22 - வாசிப்பு அனுபவம் பிரிட்டன் மீது கூட கொஞ்சம் நம்பிக்கையீனம் இருந்தது கலாட் மன்னருக்கு. ஆனால் ஜின்னா மீது? அறவே இல்லை. அவர் மீது மட்டும் முழு நம்பிக்கை வைத்திருந்தார் மிர் அஹ்மத்யார் கான். பாகிஸ்தான் உருவாக உயிரையும் கொடுக்கச் சித்தமாக இருந்தவர் அவர். ஜின்னாவின் காலணிக்குக் கூட நோகக்கூடாது என்று பார்த்துப் பார்த்து நடந்து கொண்டவர். பலூசிஸ்தான் விடுதலையை அல்லது சுதந்திரத்தை அல்லது இறையாண்மையை ஏற்றுக் கொண்ட பின்னர் தான் இருவருக்கும் இடையே நட்பு வலுவடைந்திருக்கிறது. சரிதான். நமது பயணத்திற்கு தடை ஏற்படுத்தாத பக்கத்து வீட்டுக்காரரோடு வம்பா வளர்ப்பார்கள்? நட்பு பாராட்டுவதில் தவறில்லையே? ஆனால் நடந்தது வேறு. இந்தியா வந்த பிரிட்டன் அதிகார கையளிப்பு குழு இந்தியா என்ற தேசத்தை துண்டாடுவதற்கான உள்நோக்கத்துடன் வந்திருக்கிறது. அவர்களை எப்படியாவது சந்தித்து தன் விடுதலைப் பத்திரத்தில் கையெழுத்துவாங்கிவிடத் துடித்தார் கலாட் மன்னர். அதற்கு வழி ஏற்படாமல் போகவே, ஆருயிர் நண்பன் ஜின்னாவை உதவிக்குக் கூப்பிட்டார். ஜின்னா என்ன உதவி செய்தார்? இந்தியா, பிரிட்டன், ஜின்னா என யாரும் தடுக்காத அல்லது எதிர்க்காத பலூசிஸ்தான் சுதந்திரம் காணாமல் போனது எந்தப் புள்ளியில்? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். சிகரம் பாரதி இலங்கை மலையகம்
👍 1

Comments