Para
June 18, 2025 at 08:59 AM
நீ வேறு, நான் வேறு 23 - வாசிப்பு அனுபவம் உண்மையில் பிரிட்டனும் சரி, ஜின்னாவும் சரி பலூசிஸ்தானின் தனி நாட்டு அந்தஸ்தை எப்போதும் மறுக்கவே இல்லை. அதனால்தான் இரு தரப்பினருடனும் கலாட் மன்னர் நட்பு பாராட்டி வந்தார். இல்லாவிட்டால் மக்களோடு ஆயுதம் ஏந்தி களத்திற்கு வந்து நிற்க அவருக்கு அதிக நேரம் ஆகியிருக்காது. யாரும் நமது உரிமையை மறுக்கவில்லை. ஆகவே அது பிரிட்டன் இந்தியாவை விட்டு வெளியேறும் போது இயல்பாகவே கிடைத்து விடும். அதை ஏன் சண்டை போட்டு பிடுங்க வேண்டும்? சண்டை போடப் போய் நீயும் பிரிட்டிஷ் இந்தியாவின் உறுப்பினர் ஆகிவிடு என்று பிரிட்டன் உறுப்பினர்கள் அட்டையை எடுத்து நீட்டினால் என்ன செய்வது? பிரிட்டன் கூட கள்ள மௌனம் சாதித்தது. அதை கலாட் மன்னர் உணர்ந்திருந்தார். ஆனால் தாயை நம்பும் குழந்தை போல கலாட் மன்னர் ஜின்னாவை நம்பினார். மேலதிகாரி ஏமாற்றலாம். நண்பன் காப்பான் என்றுதானே அவர் கடைசிவரை நம்பினார்? சுதந்திர பலூசிஸ்தானின் சட்ட வரைவை எடுத்துக்கொண்டு பிரிட்டன் ஆட்சியாளர்களிடம் பேசப்போன ஜின்னா எந்தப் புள்ளியில் மாறிப் போனார்? கலாட்டின் சுதந்திரத்தை மதிக்கிறேன் என்று சொன்ன ஜின்னா தடம் மாறிய இடம் எது? அடிமைப்படுத்திய பிரிட்டன் தானே சுதந்திரமோ வேறு எதுவோ பேசியிருக்க வேண்டும்? பலூசிஸ்தானின் தேவை என்னவென்று அறிந்தே அதை ஜின்னாவுடன் பேசித் தீர்க்க வேண்டிய அவசியம் என்ன? சரி. சரித்திரத்தின் ஆணிவேரைத் தொட்டுவிட்டோம். இனி அதை பிரித்து மேய வேண்டியதுதான் பாக்கி. நாளை ஆரம்பிக்கலாம். இப்படிக்கு சிகரம் பாரதி இலங்கை மலையகம்
👍 1

Comments