Para
June 19, 2025 at 03:19 AM
அன்பின் பா.ரா. அவர்களுக்கு வணக்கம், கலாட் மன்னர் கான் ஜின்னா மீது அதிக பட்சம் எவ்வளவு நம்பிக்கை வைக்க முடியுமோ அந்த அளவிற்கு அல்லவா வைத்திருந்திருக்கிறார். தனக்கு வேண்டியதை எழுதி ஜின்னாவிடம் கொடுத்ததற்கு பதிலாக நேராக பிரிட்டாஷிரிடம் கொடுத்திருக்கலாம். கலாட் ஒரு சுதந்திர ராஜ்ஜியமாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல தங்களிடமிருந்து ஆக்கிரமித்து வைத்திருக்கும் பகுதிகளை அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது கொடுத்துவிட வேண்டும். (இருக்கும் வரை தங்கள் சித்தம் என் பாக்கியம் . இங்கிருந்து வெளியேறிய பிறகு நீ யாரோ நான் யாரோ.)அதுவும் எழுத்துப்பூர்வமாக. அது எப்படி நடக்கும்? போலன் கணவாய் பிரிட்டிஷாருக்கு முக்கியமல்லவா? அவர்கள் சாமர்த்தியர்கள். உண்டு என்றும் கிடையாது. இல்லை என்றும் கிடையாது. ஜின்னாவுக்கு முஸ்லீம் மக்கள் வசிக்கும் பகுதிகள் எல்லாமும் சேர்ந்து நாடாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறுஎதிலும் சிந்தனை இல்லை. இதை பிரிட்டிஷார் நன்றாக கவனித்து வைத்திருக்கின்றனர். ஜின்னாவும் கலாட் மன்னரை சரியாக கணித்து விட்டார். ரொம்ப சமர்த்தாக இருக்கிறார். ஏமாற்றுவது எளிது. நம்பிக்கை துரோகமெல்லாம் இப்படித்தானே நடக்கும். மக்களிடம் உரை நிகழ்த்தும் போதெல்லாம் வீர உரை நிகழ்த்தி கலாட் மன்னரை நம்ப வைத்து விட்டார். ஆனால் பிரிட்டாஷிரிடம் என்ன பேச்சுவார்த்தை நடந்தது என்ற 'விவரம் வெளியே வராதவரை வதந்தி. வந்துவிட்டால் சரித்திரம்'. எவ்வளவு முக்கியமான வரிகள். சரித்திரத்தை படித்துக் கொண்டிருக்கிறோம். பாவம் கலாட் மன்னர். பாபநாசம் நடராஜன்
💯 1

Comments