Para
June 21, 2025 at 08:14 AM
நீ வேறு நான் வேறு
மெட்ராஸ் பேப்பர் அரசியல் தொடர்
அத்தியாயம் 25 - கையெழுத்தும் தலையெழுத்தும்
பலூசிஸ்தான் எனப்படும் கலாட் இன்று ஒரு சுதந்திர தேசமாக இல்லை. அது பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக இருக்கிறது. இப்போது அவர்கள் சுய சுதந்திர பிரகடனம் செய்திருக்கிறார்கள். அது மட்டும் தான் நமக்குத் தெரியும். இன்று அங்கு என்ன நடக்கிறது என்பது உலகுக்குத் தெரியாது. தெரியும் வாய்ப்புகளும் முடக்கப்பட்டுள்ளன. பலூசிஸ்தானின் விடுதலையை மறுக்கும் பாகிஸ்தான் ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு வாங்கிக் கொடுத்து தாஜா பண்ணும் வேலையில் இறங்கியிருக்கிறது. வேண்டாம் என்று எதிர்க்க எவர் இருக்கிறார்கள். இருக்கட்டும். அது இப்போது எழுத்தாளர் பத்மா அரவிந்தின் ஏரியா. அவர் விரிவாக சொல்லட்டும். நாம் பலூசிஸ்தான் போகலாம்.
நிகழ்காலத்தை சரியாகப் புரிந்து கொள்ள வரலாற்றை அறிந்துகொள்வது முக்கியம். பலூசிஸ்தான் பிரிட்டிஷ் ஆட்சியில் சுதந்திர தேசம் தான். அதாவது பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு அங்கமாக எப்போதும் அறிவிக்கப்படவே இல்லை. நியாயமாக ஜின்னா அல்ல, பிரிட்டிஷ் வைசிராய்தான் பலூசிஸ்தான் சென்று நாங்கள் இந்திய துணைக் கண்டத்தை விட்டுப் போகிறோம். இனி நீங்கள் சுதந்திர நாடு. உங்களிடம் வளங்கள் இல்லை. வேண்டுமானால் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவது குறித்து பேசட்டுமா? அல்லது தனியாகவே இருந்துகொள்கிறீர்களா என்று பிரிட்டன் கேட்டிருக்க வேண்டும்.
எப்போதும் போல அப்போதும் கள்ள மௌனம் சாதித்தது பிரிட்டன். பலூசிஸ்தானை விழுங்க ஜின்னா போட்ட திட்டம் அருமையானது. முதலில் இணைவதா இல்லையா என்று கேட்டு ஒரு ஒப்பந்தம் போடுவது. அப்போது இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவது கட்டாயமாகிவிடும். அதன் பிறகு விழுங்கி ஏப்பம் விடுவது. ஆகா. என்ன ஒரு திட்டம்! இதோ பலூசிஸ்தான் மன்னரும் கையெழுத்து போட்டுவிட்டார். பலூசிஸ்தானின் சுதந்திர ஆட்சியும் (?) ஆரம்பம் ஆகிவிட்டது. 227 நாட்கள் சுதந்திர தேசமாக இருந்த பலூசிஸ்தான் பாகிஸ்தானின் அடிமையாகிப் போனது எப்படி? ஜின்னா எந்த தந்திரங்களைக் கையாண்டு அதைச் சாத்தியமாக்கினார்? ஜின்னாவின் மறு முகத்தை கலாட் மன்னர் எப்போது கண்டுகொண்டார்? அறிந்து கொள்ள இரண்டு நாள் காத்திருக்க வேண்டும். திங்கள் கிழமை சந்திக்கலாம்.
அதுவரை விடைபெறும்
உங்கள் அன்பின்,
சிகரம் பாரதி
இலங்கை
மலையகம்
👍
😮
2