
Selvakumar P S
May 26, 2025 at 09:52 AM
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய கருத்தரங்க நிகழ்வில், ஆந்திர மாநில துணைமுதல்வர் திரு Pawan Kalyan
அவர் வைத்த கருத்துகளில் சில!
கருணாநிதி அவர்கள் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் எழுதியுள்ளதைதான் மத்தியில் மோடி அரசு அமல்படுத்த கடுமையான முயற்சி செய்கிறது.
தந்தை கலைஞர் கருணாநிதி வேண்டும் என்று சொன்னதை மகன் ஸ்டாலின் ஏன் எதிர்க்கிறார் ? ! தோல்வி பயமா ?
கடந்த நான்கு மாதங்களாக ஊராட்சி தேர்தல்களை ஸ்டாலின் ஏன் நடத்தாமல் இருக்கிறார் ? அவர் ஊராட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து 2026க்கு பிறகு நகராட்சி தேர்தலுடன் இணைத்து நடத்துவது சரி, நாங்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை இணைத்து நடத்த முயற்சி செய்வது தவறா ?
ஆண்டு தோறும் தேர்தல் என்பது மத்திய அரசின் வேகத்தில், மாநில அரசுகளின் வேகத்தில் தடைக்கற்களாய் இருக்கிறது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நம்முடைய பொருளாதாரத்தை 1.5% அதிகரிக்கும், இதன் மூலம் இன்று நான்காம் பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா விரைவில் மூன்றாம் இடத்திற்கு வர பெரிய உதவியாக இருக்கும்.

👍
🙏
2