
Selvakumar P S
243 subscribers
About Selvakumar P S
Vice President - TN BJP, Industrial cell துணை தலைவர் - தமிழக பாஜக, தொழிற்பிரிவு | என் கடன் பணி செய்து கிடப்பதே | views are personal www.x.com/selvakumar_in
Similar Channels
Swipe to see more
Posts

திமுக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல நூறு கோடி ரூபாய் ஊழல். மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வருகிறது, 2021ம் ஆண்டு கிலோவிற்கு ₹19.40 ஆக இருந்த குறைந்த பட்ச ஆதாரவிலை தற்போது ₹23.20 ஆக உயர்த்தியுள்ளது. ஒரு பக்கம் நெல் மூட்டைகளை பாதுகாக்க போதுமான அடிப்படை வசதியில்லாமல் மழையிலும் வெயிலிலும் சேதமாகி வருகிறது. மறுபக்கம் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது, 40 கிலோ மூட்டைக்கு ₹65 வரை லஞ்சம் கொடுத்தால்தான் கொள்முதல் செய்கிறார்கள்.


ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய கருத்தரங்க நிகழ்வில், ஆந்திர மாநில துணைமுதல்வர் திரு Pawan Kalyan அவர் வைத்த கருத்துகளில் சில! கருணாநிதி அவர்கள் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் எழுதியுள்ளதைதான் மத்தியில் மோடி அரசு அமல்படுத்த கடுமையான முயற்சி செய்கிறது. தந்தை கலைஞர் கருணாநிதி வேண்டும் என்று சொன்னதை மகன் ஸ்டாலின் ஏன் எதிர்க்கிறார் ? ! தோல்வி பயமா ? கடந்த நான்கு மாதங்களாக ஊராட்சி தேர்தல்களை ஸ்டாலின் ஏன் நடத்தாமல் இருக்கிறார் ? அவர் ஊராட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து 2026க்கு பிறகு நகராட்சி தேர்தலுடன் இணைத்து நடத்துவது சரி, நாங்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை இணைத்து நடத்த முயற்சி செய்வது தவறா ? ஆண்டு தோறும் தேர்தல் என்பது மத்திய அரசின் வேகத்தில், மாநில அரசுகளின் வேகத்தில் தடைக்கற்களாய் இருக்கிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நம்முடைய பொருளாதாரத்தை 1.5% அதிகரிக்கும், இதன் மூலம் இன்று நான்காம் பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா விரைவில் மூன்றாம் இடத்திற்கு வர பெரிய உதவியாக இருக்கும்.


திமுகவின் ஒரு 'தம்பி' குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்னும் பல தம்பிகள் வெளியில் இருக்கிறார்கள். அவர்களும் விரைவில் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள்.

இங்க வீரமா பேசிட்டு அங்க போய் சீட்டு நுனியில் ஏன் உக்கார்ந்துட்டு இருக்கிறார் ? எல்லாம் தம்பி உதை செயல்


இன்று பிறந்தநாள் கொண்டாடும் மத்திய இணையமைச்சர் அண்ணன் முருகன் @Murugan_MoS அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அண்ணன் முருகன் அவர்கள் இன்னும் நூறாண்டுகள் மகிழ்வுடனும், குறைவற்ற உடல் நலத்துடனும் வாழ அந்த பழனி முருகன் அருள் புரியட்டும்.


பிணையில்லா விவசாய கடனின் வரம்பு ₹1.6 லட்சத்தில் இருந்து ₹2.0 லட்சமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

கேரளா கம்யூனிஸ்ட் கோவிச்சுக்கும்ல. இந்த வருடம் ஏப்ரல், மே மாதங்களில் நல்ல மழை பொழிவு இருந்த காரணத்தால் கோவை தப்பித்தது. சிறுவாணி அணை பராமரிப்பு, ஆனைமலையாறு-நல்லாறு, பாண்டியாறு-பொன்னம்புலா என கோவை மாவட்டத்திற்கு அதிக நீர்வரத்தை உறுதி செய்யக்கூடிய ஒரு திட்டத்தை கூட கேரளா “தோழரிடம்” பேசி செயல்படுத்த முடியாத டம்மி ஆட்சிதான் திமுக ஆட்சி.


திமுக நிர்வாகி தெய்வச்செயலை காப்பாற்ற காவல்துறை துடியாய் துடிக்கிறது.