HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
May 24, 2025 at 10:35 AM
*"🌹Hazrath Books - வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள்🌹*" "*Knowledge and Clarity II Sufism Path II Ihya Ulumuddin Al Ghazali kithab II Raliyallahu thala Anhu II Hazrath Speaks II Nagore Shareef*" • Date : 24 - May - 2025 (Saturday) *இறைவணக்கத்திற்கு அடுத்தபடியாக உங்கள் சிந்தனைக்குரியவை கண்களே* மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அருட்கொடைகளில் சிறப்புமிக்கது கண். சிலவேளை படைப்பினத்தைப் பார்த்துப் படைத்தவனை அறியும் அது. வேறு சிலவேளை படைத்தவன் விரும்பாதவற்றைப் பயமின்றிப் பார்க்கிறது. திருமறையைப் பார்க்கும் அதே கண்கள், சிலவேளை இறைபக்தனின் பணியைக் குறைத்துப் பார்க்கின்றன. கனிவு சொட்டும் கண்கள், சில நேரங்களில் அனலைக் கக்குகின்றன. எனவே, இறைவணக்கத்திற்கு அடுத்தபடியாக உங்கள் சிந்தனைக்குரியவை கண்களே. அகிலத்தையே அளந்து பார்க்கும் இந்தக் கண்கள் ஏன் படைக்கப்பட்டிருக்கின்றன என்று சிந்தனை செய்யுங்கள். அவை எதற்கென்று படைக்கப்பட்டனவோ அதற்கு அவற்றைப் பயன்படுத்துங்கள். இறைவன் கொடுத்த கண்களை அவன் விரும்பாத வழியில் செலுத்தும் உரிமை உங்களுக்குக் கிடையாது. يا قَادِر الْـحَمْدُ للهِ ✍️ நாகூர் ஆண்டவரின் வழித்தோன்றல் திருப்பேரர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ.
Image from HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION: *"🌹Hazrath Books - வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள்🌹*"   "*...
❤️ 6

Comments