HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
June 16, 2025 at 03:26 AM
*"🌹Hazrath Books - வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள்🌹"* "*Knowledge and Clarity II Sufism Path II Ihya Ulumuddin Al Ghazali kithab II Raliyallahu thala Anhu II Hazrath Speaks II Nagore Shareef*" • Date : 16 - June - 2025 (Monday) *அவன் நம் அனைவரையும் நேரிய வழியில் நடத்திச் செல்வானாக!* ஆடு-மாடுகளின் தோல்களிலிருந்துசெருப்புத் தயாரிக்கிறோம். செம்மறியாட்டின் ரோமம் போர்வையாக நெய்யப்படுகிறது. ஆட்டுப்பால், மாட்டுப் பால் பற்றிய உபயோகங்களை எழுதியும் காட்ட வேண்டுமா என்ன? சில மிருகங்களை நாம் பிரயாணத்திற்குப் பயன்படுத்தினால், வேறு சில உயிரினங்கள் வீட்டுக்குக் காவல் புரிகின்றன. இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்தால் உங்கள் இதயப் பரப்பில் ஏற்படும் விந்தை யுணர்வுகளுக்குக் கணக்கு இருக்காது. இறைவனைப் பற்றி ஒரு மனிதனால் என்றைக்குமே முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது என்பதை அப்போதுதான் நீங்கள் அனுபவ ரீதியாக உணர்வீர்கள். அந்தப் பேரறிஞனைப் பற்றி முழுமையாக அறிய முடியவில்லை என்பதை உணர்ந்து கொள்வதும் இறையறிவுதான். அவன் நம் அனைவரையும் நேரிய வழியில் நடத்திச் செல்வானாக! ✍️ ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி.
Image from HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION: *"🌹Hazrath Books - வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள்🌹"*  "*K...
❤️ 🙏 7

Comments