
PERNAMBUT✌️TIMES
June 18, 2025 at 08:07 AM
ⓅⒺⓇⓃⒶⓂⒷⓊⓉ✌🏻ⓉⒾⓂⒺⓈ
⭕*ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து!*
✈️ சென்னை and டெல்லி, டெல்லி - சென்னை 2 ஏர் இந்தியா பயணிகள் விமானம், நிர்வாக காரணங்களால் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு அது குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
✈️ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 6 மணி நேரம் தாமதம் குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், சவுதி அரேபியாவின் தமாமிலிருந்து அதிகாலை 3.25 மணிக்கு சென்னைக்கு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம்தான், அதிகாலை 5 மணிக்கு மீண்டும் சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும்.
✈️ ஆனால் இன்று அந்த விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக, காலை 9.25 மணிக்குதான் தமாமிலிருந்து சென்னைக்கு வந்தது. எனவே சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானமும் தாமதமாக புறப்பட்டுச் சென்றது என்று கூறுகின்றனர்..