
Anbil Mahesh Poyyamozhi
June 16, 2025 at 11:16 AM
CLAT தேர்வில் வெற்றிபெற்று நாக்பூர் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கு தேர்வாகியுள்ள திருச்சி மிளகுப்பாறை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவிதான் ராகிணி.
தஞ்சாவூர் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருச்சி திரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை காண்பதற்கு திரண்டிருந்த பொதுமக்கள், கழகத் தொண்டர்களுக்கு நடுவே நின்றிருந்தார் #நான்முதல்வன் உருவாக்கிய புதுமைப்பெண் ராகிணி.
மாணவியை கண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி, அவரது அருகில் சென்று தனது பேனாவை வழங்கி, பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் கூறி மகிழ்ந்தார்.
‘புதுமை Pen’ பெற்ற ‘புதுமைப்பெண்’ ராகிணியின் கல்விப்பயணம் மிகச்சரியான இலக்கை எட்டி, பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்.

❤️
👍
🙏
46