Anbil Mahesh Poyyamozhi
Anbil Mahesh Poyyamozhi
June 18, 2025 at 01:11 PM
எங்கள் அணியிலிருக்கும் ஒருவருக்கு “சாகித்ய பால புரஸ்கார் 2025” விருது அறிவிக்கப்பட்டுள்ளது. “ஒற்றைச் சிறகு ஓவியா” என்ற சிறார் நாவலுக்காக எழுத்தாளர் திரு.விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் இவ்விருது பெறவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க #திராவிட_மாடல் அரசு அமைந்தது முதல் நமது பள்ளிக் கல்வித்துறையால் மாணவர்களுக்காக வெளியிடப்படும் #தேன்சிட்டு #ஊஞ்சல் ஆகிய மாத இதழ்களின் வெற்றிக்கு பங்களித்து வருபவர்தான் எழுத்தாளர் திரு.விஷ்ணுபுரம் சரவணன். அறிவியல் - முற்போக்கு சிந்தனைகளை குழந்தைகளிடம் விதைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். குழந்தைகளுக்கான அவரது எழுத்துப்பணி உயிர்ப்போடு தொடரட்டும்.
Image from Anbil Mahesh Poyyamozhi: எங்கள் அணியிலிருக்கும் ஒருவருக்கு “சாகித்ய பால புரஸ்கார் 2025” விருது ...
❤️ 👍 🙏 24

Comments