
Anbil Mahesh Poyyamozhi
June 20, 2025 at 03:40 PM
தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த மண்ணில் அவரது முதன்மை தம்பி 'நவீன தமிழ்நாட்டின் சிற்பி' முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா!
கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் - காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் @EzhilarasanCvmp அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, புகழுரையாற்றினோம். மாணவச் செல்வங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 4102 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.
'ஈரோட்டுப் பள்ளியிலும், காஞ்சிக் கல்லூரியிலும் கற்ற பாடத்தால் ஐந்து முறை ஆட்சி செய்து, தன்னுடைய ஒவ்வொரு திட்டத்தின் மூலமும் தமிழினத்தை உயர்த்திய கலைஞரின் எண்ணங்களை ஈடேற்றி வரும் நம் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழியில் 2026-லும் வெல்வோம்' என உறுதி ஏற்றோம்.

❤️
👍
🙏
29