
Lankatamil
June 17, 2025 at 04:46 AM
இருக்கை பட்டி காட்டாயம் !
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான கூட்டு வேலைத்திட்டத்தை செயல்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் ஆய்வுப் பயணத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
இம் மாதம் 30 ஆம் திகதி முதல் வாகன செயல்பாட்டில் 85 பாதுகாப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நடவடிக்கைகளில் அரச பேருந்து சாரதிகளுக்கு கட்டாய இருக்கைப் பட்டிகள் (சீட் பெல்ட்), பொதுமக்களுக்கான வட்ஸ்அப் முறைப்பாட்டு முறைமை, மற்றும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன பயணிகளுக்கு கட்டாய இருக்கைப் பட்டிகள் என்பன உள்ளடங்குகின்றன.
பேருந்து சாரதிகளுக்கு ஓய்வூதிய முறைமையை முன்மொழிந்துள்ளோம். அடுத்த ஆண்டு இந்த முறைமையை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம் எனவும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/
