Lankatamil
June 20, 2025 at 09:16 AM
மாட்டிகிட்டீங்க நித்தி!
அவுஸ்திரேலியாவிற்கு அருகில் உள்ள யூஎஸ்கே (USK) எனும் தனி நாட்டில் நித்தியானந்தா வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.
நித்தியானந்தா தங்கியிருக்கும் நாடு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றது என்று என்று நித்தியானந்தாவின் சீடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போதே இந்த தகவல்களை அவருடைய சீடர் வழங்கியுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கைலாசா என்ற 'நாட்டை' உருவாக்கியிருப்பதாக 5 ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்த நித்தியானந்தா, அது எங்கு உள்ளது, அந்த நாடு எப்படி இருக்கும் என்ற தகவல்களை வெளியிடாமல் இரகசியமாகவே வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/