Lankatamil
June 20, 2025 at 10:08 AM
முக்கிய இடங்களில் தாக்குதல்..!
60ற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய போர் விமானங்களை பயன்படுத்தி, இரவுக்குள் தெஹ்ரானில் உள்ள பல இடங்களை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF)தெரிவித்துள்ளன.
சுமார் 120 வெடிகுண்டுகள் இந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இவை ஈரானின் இராணுவ ஏவுகணை உற்பத்தி மையங்களையும், ஈரானின் அணுஆய்வு மையத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலின் இராணுவம் கூறியுள்ளது.
இரவு நேரத்தில், ஈரானும் இஸ்ரேலை நோக்கி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் ஈரான் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.
📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/