Makkal Needhi Maiam
June 13, 2025 at 04:39 AM
பாளையங்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின் படி பாளையங்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. நாகராஜன் அவர்கள் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்த விழாவில், கட்சியின் நெல்லை மண்டல செயலாளர் டாக்டர் பிரேம்நாத், மகளிர் அணி மாநில செயலாளர் திருமதி. பத்மா ரவிச்சந்திரன் (மதுரை மற்றும் நெல்லை மண்டலங்கள்), சென்னை மண்டல செயலாளர் திரு. மயில்வாகனன், நற்பணி அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் திரு. செல்லப்பாண்டி, தொழிலாளர் அணி நெல்லை மண்டல அமைப்பாளர் திரு. MK ராஜன், மகளிர் அணி மதுரை மண்டல அமைப்பாளர் திருமதி. கலையரசி, நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சொக்கர், துணை ஒருங்கிணைப்பாளர் திரு. மாணிக்கராஜ், மாவட்டச் செயலாளர்கள் திரு. சசி ஜெயபிரகாஷ், திரு. ஜெகதீஷ், நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர்கள் திரு. ஸ்டான்லி, திரு. ஷெல்டன், திரு. சித்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#kamalhaasan
#makkalneedhimaiam

👍
❤️
👏
💐
😂
😮
🙏
10