Makkal Needhi Maiam
June 17, 2025 at 10:42 AM
மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் கமல் ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில், மாபெரும் மருத்துவ முகாம்.
மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் ஆலங்குளம் & கீழப்பாவூர் தலைமை கமல் ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம், ஆலங்குளம் மநீம மாவட்டம் கீழப்பாவூரில் அமைந்துள்ள குருசுவாமி கோவில் திருமண மஹாலில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
நெல்லை மண்டல செயலாளர் டாக்டர் திரு. பிரேம்நாத் அவர்கள் தலைமையில், பொருநை மருத்துவக் குழுவினரின் ஒத்துழைப்பில் நடைபெற்ற இந்த முகாமில், எலும்பு சம்பந்தமான மருத்துவம், நுரையீரல் மருத்துவம், மகப்பேறு & பெண்கள் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், இருதயநோய் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டதுடன், உரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பிரபாகரன், ஆலங்குளம் தொழிலதிபர் திரு. கோல்டன் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
மேலும் நிகழ்வில் ஆலங்குளம் மாவட்ட செயலாளர் திரு வே.ஶ்ரீகருணாகர ராஜா,தென்காசி மாவட்ட செயலாளர் திரு. இல. செல்லப்பா, நற்பணி இயக்க செயலாளர் திரு. D. முருகேசன், இணை செயலாளர் திரு. பரமசிவம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளான திரு. கிருஷ்ணன், தங்கம், S. முருகன், நிர்வாகிகள் திரு. வே. சந்தனகுமார், திருவேங்கடம் திரு. கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மருத்துவக் குழுவில் திரு. S. மாரியப்பன், திரு. R. பரமசிவன், திரு. M. சிவகுமார், திரு. P. ஆவுடையப்பன், திரு. V. கமல் இசக்கி ஆகியோர் பங்கேற்று உரிய சிகிச்சைகளை வழங்கினர்.
@ikamalhaasan
#kamalhaasan
#makkalneedhimaiam

❤️
👍
👏
🙏
7