
Sammil Majeed
May 24, 2025 at 06:47 PM
இலங்கைச் சகோதரர் அஸீஸ் நிஸாருத்தீன் அவர்களின் பதிவு.
(24.05.2025)
**
கேட்டானே ஒரு கேள்வி!
நேற்று வெள்ளிக்கிழமை, கொழும்பு ஐ.நா. சபை அலுவலகத்தின் முன்னால் இது நிகழ்ந்தது.
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இன அழிப்புப் போருக்கு எதிராக சிங்கள சகோதரர்களின் 'யூத் ஃபோா் சேஞ்ச்' (Youth for Change) அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
ஜே.வி.பி.யில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்த முன்னிலை சமத்துவக் கட்சியின் (பெரட்டுகாமி) ஒரு கிளையாக இயங்கும் இந்த அமைப்பில், சகோதர சிங்கள இனத்தைச் சேர்ந்த ஆண், பெண் பலர் பாகுபாடின்றி உற்சாகமாகக் கலந்துகொண்டிருந்தார்கள்.
ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் வேளை, அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக மிகவும் உணர்வுபூர்வமாக கோஷமிட்டுக் கொண்டிருந்த ஒரு இளைஞனை அணுகி உரையாடினேன்.
எங்கள் இளைஞர்கள் தொழில், படிப்பு, பொழுதுபோக்கு என்று நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், இந்த சிங்கள இளைஞன் காஸா மக்கள் மீது கொண்டிருந்த பரிவு என்னை ஆழமாகக் கவர்ந்தது.
அந்த இளைஞன் 'யூத் ஃபோா் சேஞ்ச்' அமைப்பைச் சேர்ந்தவர் என்பதை அவரது உரையாடலிலிருந்து புாிந்துகொண்டேன்.
உண்மையாகவே, இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறியதொரு தொகையினரே கலந்துகொண்டிருந்தோம்.
அதுவும் வழக்கமாக இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்கும் அதே “முஸல்மான்” முகங்கள்தான்.
அந்த இளைஞனோடு கதைக்கும்போது, அவனுக்குப் புவியரசியல் பற்றிய ஆழமான பாா்வை இருந்தது எனக்குப் புாிந்தது.
👉 "மத்தியக் கிழக்கின் பெட்ரோல் வளங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசியலுக்காகவே அமெரிக்கா அரபு மண்ணில் இஸ்ரேலைப் பாதுகாத்து வருகிறது."
👉 " ... அதனால்தான் அமொிக்கா இன்றுவரை அதன் கொடுமைகளை ஆதரித்துவருகிறது. அது இழைக்கும் மனித உாிமை மீறல்களுக்கு முட்டுக் கொடுத்து வருகிறது. அப்படி இருந்தும், அரபு நாடுகள் வெளிப்படையாகவே அமெரிக்காவை ஆதரித்து வருகின்றன."
👉 "அமொிக்கா, இஸ்ரேல், அரபு நாடுகள் ஒற்றுமையாகவே மத்தியக் கிழக்கில் அரசியல் காய்களை நகா்த்தி வருகின்றன."
👉 "இந்தக் கொடூரமான முக்கோண நட்பு அரசியலை முஸ்லிம்கள் ஏன் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்? "
👉 ”முஸ்லிம்களின் உணர்வுகள் ஏன் மரத்துப்போய் இருக்கின்றன?"
👉 "பலஸ்தீனின் காஸாவில் நடக்கும் கொடுமைகளுக்காக இன, மதப் பேதமின்றி உலகம் முழுவதும் அலையலையாக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவதை பார்த்தும் முஸ்லிம்கள் ஏன் அமைதியாக இருக்கிறாா்கள்?"
என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான்.
அந்த இளைஞனின் நேர்மையான கேள்வி என்னைச் சிலிா்க்க வைத்தது. ஒரு சிங்கள இளைஞன் காட்டும் அக்கறையும் அரசியல் விழிப்புணர்வும், நம் சமுதாயத்தின் “கள்ள“ மௌனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது வேதனையாகவும் வெட்கமாகவும் இருந்தது.
அவனது கேள்வி இன்னும் என் காதுகளில் அலைகளாக ஒலித்துக் கொண்டிருக்கிறது; என் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறது.
நாம் எங்கே நின்றுகொண்டிருக்கிறோம்? யாா் பக்கம் நிற்கிறோம்?
நமது பொறுப்பு என்ன?
நமது உணா்வுகள் மரத்துப் போவதற்கும், நமது “கள்ள” 🥸 மௌனத்திற்கும் காரணம் என்ன?
***
https://whatsapp.com/channel/0029Va6AXT2K5cDLlMrwML3t
😢
👍
🇵🇸
❤️
💯
😒
😥
🥲
21