
Sammil Majeed
1.1K subscribers
About Sammil Majeed
🔸 Trail me to stay updated regarding my latest YouTube uploads, FB posts & others!🏅
Similar Channels
Swipe to see more
Posts

https://youtu.be/7cwML2-asTI?si=Ytlpc_LubnP-aohM

சகோதரர் ஷாஹுல் ஹமீது உமரீ மொழிபெயர்த்து, நான் செம்மையாக்கி சீர்மை மூலம் வெளிவந்த *இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு* முதல் பாகம் பற்றிய ஒரு சகோதரரின் ஃபேஸ்புக் பதிவு. 👇 https://www.facebook.com/share/1AWY27Zzvu/ "உண்மையில் மூல மொழியின் சுவை குன்றாமல் மொழிபெயர்த்து மக்கள் மன்றத்திற்கு கொண்டுவருவது என்பது அவ்வளவு இலேசான காரியமல்ல. நிச்சயமாக மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி நமக்கு முன் உரையாற்றுவது போன்ற மனநிலையே இந்நூலை வாசிக்கும்போது உள்ளத்தில் ஏற்படுகிறது. இஸ்லாமிய வரலாற்று ஆளுமைகளை அவர்களுக்கே உரிய தனித்துவங்களோடும் ஊடாட்டத்தோடும் முன்வைக்கும் அருமையான நூல். மொழிபெயர்த்துத் தமிழுலகிற்குத் தந்த அஷ்ஷேய்க் ஷாஹ் உமரிக்கு வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும். உங்களிடமிருந்து நாம் இன்னும் எதிர்பார்க்கிறோம். அத்தோடு வெளியிட்ட சீர்மைக்கும் நன்றியும் பிரார்த்தனைகளும்." *** நூல்கள் அறிமுகம்👇 https://youtu.be/qYOFzMvqCXE நூலை வாட்சப்வழி ஆர்டர் செய்ய: +91-97904 11844

இஸ்லாம் மேற்கு நாகரிகத்தோடு இணக்கம் பாராட்டுவதல்ல. ஏனெனில், மேற்கு "நாகரிகம்" மானுட இயல்போடு இணக்கம் பாராட்டுவதல்ல. *** https://whatsapp.com/channel/0029Va6AXT2K5cDLlMrwML3t


https://youtube.com/shorts/cS8UlULCpo0?si=CeZ7L8vB95aUTSt6

இலங்கைச் சகோதரர் அஸீஸ் நிஸாருத்தீன் அவர்களின் பதிவு. (24.05.2025) ** கேட்டானே ஒரு கேள்வி! நேற்று வெள்ளிக்கிழமை, கொழும்பு ஐ.நா. சபை அலுவலகத்தின் முன்னால் இது நிகழ்ந்தது. பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இன அழிப்புப் போருக்கு எதிராக சிங்கள சகோதரர்களின் 'யூத் ஃபோா் சேஞ்ச்' (Youth for Change) அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. ஜே.வி.பி.யில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்த முன்னிலை சமத்துவக் கட்சியின் (பெரட்டுகாமி) ஒரு கிளையாக இயங்கும் இந்த அமைப்பில், சகோதர சிங்கள இனத்தைச் சேர்ந்த ஆண், பெண் பலர் பாகுபாடின்றி உற்சாகமாகக் கலந்துகொண்டிருந்தார்கள். ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் வேளை, அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக மிகவும் உணர்வுபூர்வமாக கோஷமிட்டுக் கொண்டிருந்த ஒரு இளைஞனை அணுகி உரையாடினேன். எங்கள் இளைஞர்கள் தொழில், படிப்பு, பொழுதுபோக்கு என்று நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், இந்த சிங்கள இளைஞன் காஸா மக்கள் மீது கொண்டிருந்த பரிவு என்னை ஆழமாகக் கவர்ந்தது. அந்த இளைஞன் 'யூத் ஃபோா் சேஞ்ச்' அமைப்பைச் சேர்ந்தவர் என்பதை அவரது உரையாடலிலிருந்து புாிந்துகொண்டேன். உண்மையாகவே, இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறியதொரு தொகையினரே கலந்துகொண்டிருந்தோம். அதுவும் வழக்கமாக இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்கும் அதே “முஸல்மான்” முகங்கள்தான். அந்த இளைஞனோடு கதைக்கும்போது, அவனுக்குப் புவியரசியல் பற்றிய ஆழமான பாா்வை இருந்தது எனக்குப் புாிந்தது. 👉 "மத்தியக் கிழக்கின் பெட்ரோல் வளங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசியலுக்காகவே அமெரிக்கா அரபு மண்ணில் இஸ்ரேலைப் பாதுகாத்து வருகிறது." 👉 " ... அதனால்தான் அமொிக்கா இன்றுவரை அதன் கொடுமைகளை ஆதரித்துவருகிறது. அது இழைக்கும் மனித உாிமை மீறல்களுக்கு முட்டுக் கொடுத்து வருகிறது. அப்படி இருந்தும், அரபு நாடுகள் வெளிப்படையாகவே அமெரிக்காவை ஆதரித்து வருகின்றன." 👉 "அமொிக்கா, இஸ்ரேல், அரபு நாடுகள் ஒற்றுமையாகவே மத்தியக் கிழக்கில் அரசியல் காய்களை நகா்த்தி வருகின்றன." 👉 "இந்தக் கொடூரமான முக்கோண நட்பு அரசியலை முஸ்லிம்கள் ஏன் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்? " 👉 ”முஸ்லிம்களின் உணர்வுகள் ஏன் மரத்துப்போய் இருக்கின்றன?" 👉 "பலஸ்தீனின் காஸாவில் நடக்கும் கொடுமைகளுக்காக இன, மதப் பேதமின்றி உலகம் முழுவதும் அலையலையாக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவதை பார்த்தும் முஸ்லிம்கள் ஏன் அமைதியாக இருக்கிறாா்கள்?" என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான். அந்த இளைஞனின் நேர்மையான கேள்வி என்னைச் சிலிா்க்க வைத்தது. ஒரு சிங்கள இளைஞன் காட்டும் அக்கறையும் அரசியல் விழிப்புணர்வும், நம் சமுதாயத்தின் “கள்ள“ மௌனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது வேதனையாகவும் வெட்கமாகவும் இருந்தது. அவனது கேள்வி இன்னும் என் காதுகளில் அலைகளாக ஒலித்துக் கொண்டிருக்கிறது; என் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறது. நாம் எங்கே நின்றுகொண்டிருக்கிறோம்? யாா் பக்கம் நிற்கிறோம்? நமது பொறுப்பு என்ன? நமது உணா்வுகள் மரத்துப் போவதற்கும், நமது “கள்ள” 🥸 மௌனத்திற்கும் காரணம் என்ன? *** https://whatsapp.com/channel/0029Va6AXT2K5cDLlMrwML3t

https://youtube.com/shorts/X7ytmbnsNMw?feature=share

https://youtu.be/T5qozgzgfnU *அலீயின் (றளி) ஆட்சி-நிர்வாகம் (பகுதி 6)* மிக முக்கியப் பேசுபொருள். நிச்சயம் பாருங்கள்; அதிகம் பகிருங்கள்.

*زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَاۗءِ وَالْبَنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّھَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَرْثِ ۭ ذٰلِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ۚ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ* *உலக மோகங்களான பெண்கள், பிள்ளைகள், பொன்-வெள்ளி குவியல்கள், இலச்சினை இடப்பட்ட புரவிகள், கால்நடைகள், வயல்வெளி ஆகியன மக்கள் பார்வையில் அழகாக்கப்பட்டுள்ளன. இவையாவும் உலக வாழ்விற்குப் பயன்பாட்டுப் பொருட்கள். அல்லாஹ்விடத்திலோ அழகிய தங்குமிடம்! (03:14)* செல்வமும் பிள்ளைகளும் மனிதனுக்குப் பெருவிருப்பமாய் இருக்கின்றன. அவன் இவற்றை விரும்பித்தான் ஆக வேண்டும். மனிதன் உலகத்தில் நிலைத்து நீடித்திருக்க இவை மிகவும் தேவை! ஆனால் வெறுமனே இவற்றை நேசிப்பது இங்கே குறிப்பிடப்படவில்லை. மாறாக, *தஜ்ஈன்* குறிப்பிடப்படுகிறது. *தஜ்ஈன்* என்றால், ஒரு விசயம் மனத்தில் நிரந்தரமாய் நிலைத்துவிடுவது. அதன் தாக்கத்தால் மற்றெல்லாப் பொருட்களையும் அதே கண்கொண்டு நோக்குவது. அதைத் தவிர்த்துவிட்டு, வேறெந்தப் பொருளையும் பார்க்க மறுப்பது; பார்க்க முடியாமல்போவது! எந்தப் பொருளானாலும் அதை எடைபோடவும் மதிப்பிடவும் மனத்தில் உள்ள ‘அந்தப் பொருளையே’ உரைகல்லாகப் பயன்படுத்துவது. ஏதேனும் ஒரு பொருளுக்கு (அது எப்பொருளோ) இந்த அளவுக்கு மனத்தில் இடம்கொடுப்பது படைத்தவனின் நாட்டத்திற்கும் நியதிக்கும் எதிரானது. இதனால் வாழ்க்கையில் தடுமாற்றம் தோன்றுகிறது. அவன் நடுநிலை தவறுகிறான். சரியான நேர்ப்பாதையைவிட்டும் மனிதனை அது அகற்றிவிடுகிறது. இது ஒரு நோய்! அகப்பார்வை இழப்பதாலும், இறைவன் வகுத்த நியதிகளை மீறித் தொலைப்பதாலும் தோன்றுகின்ற நோய்! சுருங்கச் சொன்னால் ‘தக்வா’ இல்லாமல் போவதால் இந்த நோய் உருவாகிறது. இந்நோய்க்கு மனோ இச்சையும் ஷைத்தானும்தான் மூலக் காரணம். இயல்பாகவே, தான் நேசிக்க வேண்டிய எல்லைகளை எல்லாம் தாண்ட மனம் முற்படுகிறது. அந்த ஆசைகளின் மீது கண்கவர் கவர்ச்சி வண்ணங்களை ஷைத்தான் பூசுகிறான். சுண்டி இழுக்கும் வர்ண எதிர்பார்ப்புகளைப் போர்த்துகிறான். அதன் பின் வேறு பக்கம் பார்க்கவே மனம் முன்வருவதில்லை. இதன் காரணமாகத்தான் வேறு இடங்களில் *தஜ்ஈனைக்* குர்ஆன் ஷைத்தான்களோடு இணைத்துச் சொல்கிறது. -- *ததப்புருல் குர்ஆன்* இரண்டாம் பாகம் (ஆலு இம்ரான் அத்தியாயத்திலிருந்து ...) Join my WhatsApp channel 👇 https://whatsapp.com/channel/0029Va6AXT2K5cDLlMrwML3t

இன்று இஸ்ரேல், டாக்டர் ஆலா, டாக்டர் ஹம்தி அந்நஜ்ஜார் தம்பதியரின் வீட்டைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதில் அவர்களது 9 குழந்தைகளும் கொல்லப்பட்டனர். டாக்டர் ஆலா உயிர்களைக் காப்பாற்றும் சேவையில் இருக்கையில் அவருக்கு இந்தச் செய்தி கிடைத்தது. அவரது முழுக் குடும்பத்தினரின் உடல்களும் பின்னர் கிடைக்கப்பெற்றன. கற்பனைக்கு எட்டாத குரூர வேதனை. அவர்களின் உடல்கள் கருகி எரிந்துள்ளன. தாக்குதல் நடப்பதற்குச் சற்று முன், டாக்டர் ஆலா தனது கணவர் ஹம்தி அந்நஜ்ஜாருடன் பணிக்குச் சென்றுள்ளார். பின்னர், தனது கணவர் வீடு திரும்ப சிறிது நேரத்திற்கு முன்பு, தெற்கு கான் யூனிஸில் உள்ள கிசான் அந்நஜ்ஜார் பகுதியில் உள்ள அவர்களின் வீட்டை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியது. அவர்களின் 10 குழந்தைகளில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். 10வது குழந்தை காயமடைந்தது. ** Join my WhatsApp channel 👇 https://whatsapp.com/channel/0029Va6AXT2K5cDLlMrwML3t


ஃபலஸ்தீனர்கள் ஒருபுறம் கொன்று குவிக்கப்பட, MBS போன்ற அறபுக் கைப்பாவைகளோ ஸியோனிச, ஏகாதிபத்திய அஜென்டாக்களை நிறைவேற்ற உழைப்பது வெறுக்கத்தக்கதும், தார்மீக ரீதியில் சப்பைக்கட்ட முடியாததும் ஆகும். காஸாவைப் பாதுகாப்பதற்கும் அம்மக்களுக்கு உதவுவதற்கும் பதில், தனது கள்ள மெளனத்தின், ஒத்துழைப்பின் மூலம் இஸ்ரேலிய அராஜகங்களை அவர் இலகுவாக்குகிறார். லட்சக்கணக்கில் முஸ்லிம்கள் இனப்படுகொலையை எதிர்கொள்ள, அவரோ அந்த ஸியோனிச இனப் படுகொலையை ஸ்பான்சர் செய்யும் ட்ரம்புடன் மில்லியன் டாலர்கள் ஆயுத டீலில் கையெழுத்திடுகிறார். இது ராஜதந்திரம் அல்ல; பச்சைத் துரோகம். யார் நீதிக்கு நின்றார்கள், யார் அநீதிக்கும் கொடுங்கோலர்களுக்கும் துணைபோனார்கள் என்பதை வரலாறு சொல்லும். https://whatsapp.com/channel/0029Va6AXT2K5cDLlMrwML3t
