
Sammil Majeed
May 25, 2025 at 04:14 AM
இன்று இஸ்ரேல், டாக்டர் ஆலா, டாக்டர் ஹம்தி அந்நஜ்ஜார் தம்பதியரின் வீட்டைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதில் அவர்களது 9 குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
டாக்டர் ஆலா உயிர்களைக் காப்பாற்றும் சேவையில் இருக்கையில் அவருக்கு இந்தச் செய்தி கிடைத்தது. அவரது முழுக் குடும்பத்தினரின் உடல்களும் பின்னர் கிடைக்கப்பெற்றன. கற்பனைக்கு எட்டாத குரூர வேதனை. அவர்களின் உடல்கள் கருகி எரிந்துள்ளன.
தாக்குதல் நடப்பதற்குச் சற்று முன், டாக்டர் ஆலா தனது கணவர் ஹம்தி அந்நஜ்ஜாருடன் பணிக்குச் சென்றுள்ளார்.
பின்னர், தனது கணவர் வீடு திரும்ப சிறிது நேரத்திற்கு முன்பு, தெற்கு கான் யூனிஸில் உள்ள கிசான் அந்நஜ்ஜார் பகுதியில் உள்ள அவர்களின் வீட்டை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியது. அவர்களின் 10 குழந்தைகளில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். 10வது குழந்தை காயமடைந்தது.
**
Join my WhatsApp channel 👇
https://whatsapp.com/channel/0029Va6AXT2K5cDLlMrwML3t

😢
😭
🤲
16