
Sammil Majeed
June 4, 2025 at 05:37 AM
*زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَاۗءِ وَالْبَنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّھَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَرْثِ ۭ ذٰلِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ۚ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ*
*உலக மோகங்களான பெண்கள், பிள்ளைகள், பொன்-வெள்ளி குவியல்கள், இலச்சினை இடப்பட்ட புரவிகள், கால்நடைகள், வயல்வெளி ஆகியன மக்கள் பார்வையில் அழகாக்கப்பட்டுள்ளன. இவையாவும் உலக வாழ்விற்குப் பயன்பாட்டுப் பொருட்கள். அல்லாஹ்விடத்திலோ அழகிய தங்குமிடம்! (03:14)*
செல்வமும் பிள்ளைகளும் மனிதனுக்குப் பெருவிருப்பமாய் இருக்கின்றன.
அவன் இவற்றை விரும்பித்தான் ஆக வேண்டும். மனிதன் உலகத்தில் நிலைத்து நீடித்திருக்க இவை மிகவும் தேவை!
ஆனால் வெறுமனே இவற்றை நேசிப்பது இங்கே குறிப்பிடப்படவில்லை. மாறாக, *தஜ்ஈன்* குறிப்பிடப்படுகிறது.
*தஜ்ஈன்* என்றால், ஒரு விசயம் மனத்தில் நிரந்தரமாய் நிலைத்துவிடுவது. அதன் தாக்கத்தால் மற்றெல்லாப் பொருட்களையும் அதே கண்கொண்டு நோக்குவது. அதைத் தவிர்த்துவிட்டு, வேறெந்தப் பொருளையும் பார்க்க மறுப்பது; பார்க்க முடியாமல்போவது! எந்தப் பொருளானாலும் அதை எடைபோடவும் மதிப்பிடவும் மனத்தில் உள்ள ‘அந்தப் பொருளையே’ உரைகல்லாகப் பயன்படுத்துவது.
ஏதேனும் ஒரு பொருளுக்கு (அது எப்பொருளோ) இந்த அளவுக்கு மனத்தில் இடம்கொடுப்பது படைத்தவனின் நாட்டத்திற்கும் நியதிக்கும் எதிரானது. இதனால் வாழ்க்கையில் தடுமாற்றம் தோன்றுகிறது. அவன் நடுநிலை தவறுகிறான். சரியான நேர்ப்பாதையைவிட்டும் மனிதனை அது அகற்றிவிடுகிறது.
இது ஒரு நோய்! அகப்பார்வை இழப்பதாலும், இறைவன் வகுத்த நியதிகளை மீறித் தொலைப்பதாலும் தோன்றுகின்ற நோய்! சுருங்கச் சொன்னால் ‘தக்வா’ இல்லாமல் போவதால் இந்த நோய் உருவாகிறது.
இந்நோய்க்கு மனோ இச்சையும் ஷைத்தானும்தான் மூலக் காரணம். இயல்பாகவே, தான் நேசிக்க வேண்டிய எல்லைகளை எல்லாம் தாண்ட மனம் முற்படுகிறது. அந்த ஆசைகளின் மீது கண்கவர் கவர்ச்சி வண்ணங்களை ஷைத்தான் பூசுகிறான். சுண்டி இழுக்கும் வர்ண எதிர்பார்ப்புகளைப் போர்த்துகிறான். அதன் பின் வேறு பக்கம் பார்க்கவே மனம் முன்வருவதில்லை.
இதன் காரணமாகத்தான் வேறு இடங்களில் *தஜ்ஈனைக்* குர்ஆன் ஷைத்தான்களோடு இணைத்துச் சொல்கிறது.
-- *ததப்புருல் குர்ஆன்*
இரண்டாம் பாகம்
(ஆலு இம்ரான் அத்தியாயத்திலிருந்து ...)
Join my WhatsApp channel 👇
https://whatsapp.com/channel/0029Va6AXT2K5cDLlMrwML3t
❤️
👍
10