
Sammil Majeed
June 13, 2025 at 04:19 PM
ஈரானின் எதிர்த் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் தங்கள் வான்வழியைப் பயன்படுத்த அனுமதித்ததன் மூலம் சிரியா, சவூதி அறபியா, ஜோர்டான் ஆகிய அறபு அரசுகள் இஸ்ரேலுடன் இணைந்து ஒருங்கிணைந்த ஒரு பிராந்திய ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
முன்னதாக இன்று, ஜோர்டானிய வான்பாதுகாப்புப் படைகள், ராயல் விமானப் படையின் ஆதரவுடன் இஸ்ரேலை நோக்கி ஜோர்டான் வான்வெளியில் நுழைந்த பல ஈரான் ட்ரோன்களை இடைமறித்துள்ளன.
அதே நேரம் இஸ்ரேல் போர் விமானங்கள், சவூதி போர் விமானங்களின் உதவி மற்றும் வழிகாட்டலுடன், சவூதி எல்லைக்குள் பறந்த ஈரான் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளன.
இது தொடர்பான மற்றொரு நிகழ்வில், ஈரானில் வான் தாக்குதல்கள் நடத்திவிட்டுத் திரும்பும் வழியில் சிரியாவின் டெய்ர்-எஸ்ஸோர் மாகாண வான்வெளியில் வைத்து இஸ்ரேலின் F-16 போர் விமானம் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
Courtesy: @mintpressnews
**
Join my WhatsApp channel 👇
https://whatsapp.com/channel/0029Va6AXT2K5cDLlMrwML3t

😡
👍
😢
❤️
🤦♂️
🤷♂️
17