Sammil Majeed
June 15, 2025 at 05:59 AM
கள எதார்த்தத்தைப் பேசும் முகம்மத் இக்பால் என்ற சகோதரரின் மிக உண்மையான பதிவு.
***
எங்கே, ஒருவரையும் காணோம்? வெக்கப்படாம வாங்களேன் ... 57 முஸ்லிம் நாடுகளில் ஈரானை மாத்திரம் ஏன் இஸ்ரேல் தாக்குகிறது?
“ஈரான் ஒருபோதும் இஸ்ரேலைத் தாக்காது, ஈரானுக்கும் யூதர்களுக்கும் இடையில் புரிந்துணர்வு உள்ளது, இவர்கள் இருவரும் ஒன்றுதான், யூதர்களைவிட மிகவும் மோசமானவர்கள் ஷியா காஃபிர்கள், இஸ்ரேலை நம்பினாலும் ஈரானை நம்பக் கூடாது, ஈரான் ஷியாக்கள் இஸ்லாத்தை அழிக்க வந்தவர்கள்."
மேலே உள்ள வசனங்கள் எல்லாம், கடந்த காலங்களில் மத்தியக் கிழக்கு மற்றும் பாலஸ்தீன் விவகாரம் பற்றியும், அதில் ஈரானுக்கு சார்பாகவும் எழுதியபோது எனது கட்டுரைகளுக்குப் பதிவிடப்பட்ட பின்னூட்டங்கள்.
போதாததற்கு இன்னும் ஒருபடி மேலே சென்று எனக்கும் ஷியா முத்திரை குத்தினார்கள்.
தற்போது ஈரான் இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குகிறது. ஒட்டுமொத்த இஸ்ரேலும் அலறுகிறது. இந்நேரத்தில் இஸ்ரேலும் ஈரானும் ஒன்று என்று கருத்து பகிர்ந்த அந்த அதிமேதாவிகளை மாத்திரம் சமூக வலைத் தளங்களில் காணவில்லை.
உங்கள் கருத்துகள் மூலம் அரசியலில் உங்கள் அறிவு, மூளை எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி எனக்கு நன்றாகப் புரிந்தது. ஆனாலும் அதனை நான் காட்டிக்கொள்ளவில்லை.
பரவாயில்லை, கோபிக்க மாட்டேன் வாங்க. வந்து தற்போது 57 முஸ்லிம் நாடுகளில் ஈரானை மட்டும் ஏன் இஸ்ரேல் தாக்குகிறது? ஈரான் ஏன் பதிலுக்கு இஸ்ரேலைத் தாக்குகிறது என்பதற்கு விளக்கம் தாருங்கள்.
இந்த போர் முடியும்வரை கொஞ்ச நாளைக்கு அமைதியாக இருந்துவிட்டு, சில காலம் சென்ற பின்பு மீண்டும் வந்து அவர்கள் ஷியா காஃபிர்கள் என்பார்கள்.
நீங்கள் கூறுகின்ற அந்த ஷியாக்களால்தான் இன்று ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களின் கௌரவமும் காப்பாற்றப்படுகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.
***
Join my WhatsApp channel 👇
https://whatsapp.com/channel/0029Va6AXT2K5cDLlMrwML3t
❤️
👍
💯
❤
👌
45