JAYAM Sk GOPI எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏
JAYAM Sk GOPI எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏
June 14, 2025 at 11:16 PM
இறை வழிபாடு என்பது என்ன ? எப்போது ஆலயம் சென்றாலும் ஒரு மாணவன் தலைமை ஆசிரியரை பார்த்து நிற்பது போல் பயபக்தியுடன் அவர் முன் கூனி குருகி நில்லுங்கள்... ஏனெனில் உங்கள் நடவடிக்கையும் உங்கள் மனசாட்சி மட்டுமே அறியும்..மனசாட்சியின் ரகசியங்களை இறைவன் மட்டுமே அறிவார்! எதற்கு வந்தோம் என்பதை இறைவன் அறிவார்! நம் வேண்டுதல் ஆலயம் நுழையும் போதே அவருக்கு தெரிந்து விடும்! நம் நடவடிக்கைகள் கண்டே தீர்வுகள் இறைவனிடம் கிடைக்கும்! சில நேரம் ஆலயத்தில் நம்மால் நுழைய கூட நம்மால் இயலாது, முடியாது அது ஏன் தெரியுமா ? நமக்கு அவரிடமிருந்து அழைப்பு இல்லையென்பதே.. எத்தனை பணம்,அதிகாரம்,செல்வாக்கு,ஆள்பலம், இருந்தாலும் எளிமையை கொண்டாடுங்கள்...எல்லாம் இருக்கிறது என்னிடம் என்று நினைப்போடு ஆலயம் சென்றால் இறைவனின் தரிசனம் கிடைக்கும் ஆனால் அவரின் அனுகிரகம் கிடைக்காது. உரிமையோடும் உள்ளன்போடும் எளிமையோடும்,உண்மையோடும் பக்தியோடும் கருணையோடும் இருந்தால் இறைவனை இலகுவாக நெருங்க முடியும். முயற்சி செய்து பாருங்கள். ■JSKகோபி
🙏 ❤️ 👍 🦚 🦜 💚 💯 🙇‍♀ 👌 589

Comments