Aiadmk IT Wing
June 22, 2025 at 06:50 AM
இந்த விடியா திமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் சீரழிந்து உள்ளது எனினும், அதில் முதல் இடம் பிடிப்பது சுகாதாரத்துறையாகதான் இருக்கும்.
#icuவில்_சுகாதாரத்துறை என்று மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் பலமுறை எச்சரித்துவிட்ட பின்பும், இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு திருந்திய பாடில்லை!
மருந்துகள் பற்றாக்குறை
மருத்துவர்கள் பற்றாக்குறை
மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை என சுகாதாரத்துறையே ஓட்டையாக உள்ளது.
இதையெல்லாம் கவனிக்க வேண்டிய அமைச்சரோ மாரத்தான் ஓடி போட்டோஷூட் எடுப்பதிலும், புகார் கொடுப்பவர்களை மிரட்டுவதிலும் முனைப்பாக இருப்பது வெட்கக்கேடானது.
இந்த லட்சணத்தில் தனது துறையை வைத்திருக்கும் இந்த அமைச்சர் சார்-க்கு, எங்களைப் பற்றி வாய்கிழிய பிரஸ் மீட் கொடுக்க கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தினமும் மாரத்தான் அமைச்சருடன் வாக்கிங் செல்லும் பொம்மை முதல்வர், சினிமா விமர்சனம் கேட்பதோடு நில்லாமல், மருத்துவத் துறை பற்றியும் கேட்டறிந்து, இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
https://x.com/AIADMKOfficial/status/1936674878351941923?t=M1l6uRIbJL3eQxuA5MDOfA&s=19
😢
4