M.K.Stalin Updates
21.5K subscribers
About M.K.Stalin Updates
Fan Page of Chief Minister of Tamil Nadu
Similar Channels
Swipe to see more
Posts
📺 *இன்றைய முக்கிய செய்திகள்*🎙️ ➡️ *திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.* ➡️ *தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது. நீதியும் கிடையாது என பாஜக செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.* ➡️ *நெல்லை மாவட்டத்திற்கு புதிதாக சிப்காட், மேம்பாலம் என அடுக்கடுக்கான திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.* ➡️ *மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருக்கு தன் தமிழ்வணக்கத்தைச் செலுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.* ➡️ *இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தல்.* 👉 *சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டி அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் 750-க்கும் அதிகமான மதுபான பாட்டில்கள் பறிமுதல்.* 👉 *தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டையாக இருக்க கூடாது என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை.* 👉 *உத்திரபிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் மீண்டும் மீண்டும் தீ விபத்து ஏற்படுவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.*
📺 *இன்றைய முக்கிய செய்திகள்*🎙️ ➡️ *புதிதாக 147 உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.* ➡️ *கலைஞர் கருவூலம் இணையப்பக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.* ➡️ *வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.* ➡️ *காலநிலை மாநாடு நடத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.* ➡️ *பெரியார் சிலையை அவமதிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை.* ➡️ *கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முதற்கட்ட நிதியை ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு.* 👉 *திமுக குறித்து அவதூறு பரப்பிய ஜூனியர் விகடனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.* 👉 *திருப்பரங்குன்றம் கோயிலை மையமாக வைத்து மதக்கலவரத்தை பாஜக தூண்டுவதாக மதுரை மக்கள் கண்டனம்.* 👉 *ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.*
📺 *இன்றைய முக்கிய செய்திகள்*🎙️ ➡️ *பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.* ➡️ *பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.* ➡️ *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.* ➡️ *தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாட்டை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.* ➡️ *திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இன்றுவரை 2,504 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல்.* ➡️ *தமிழ்நாட்டை முழுவதும் புறக்கணித்த பாஜக அரசின் தமிழர் விரோத பட்ஜெட்டை கண்டித்து பிப்ரவரி 8 அன்று திமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு.* ➡️ *தந்தை பெரியாரும் பிரபாகரனும் எதிர்துருவங்கள் அல்ல என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரான விசுவநாதன் ருத்ரகுமாரன் அறிக்கை.* 👉 *மணிப்பூர் வன்முறையில் அம்மாநில பாஜக முதலமைச்சருக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு.* 👉 *வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க ஒன்றிய பாஜக அரசு திணறி வருகிறது என ராகுல் காந்தி குற்றச்சாட்டு.*
https://whatsapp.com/channel/0029Va4cZOiCBtx9gSdqQZ3n/488