
NETHAJI LAW FIRM
33 subscribers
About NETHAJI LAW FIRM
Law updates, News, Judgments
Similar Channels
Swipe to see more
Posts

👉🏼 சீமான் வீட்டு காவலாளியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் இருந்து 20 தோட்டாக்கள் பறிமுதல் 👉🏼 முன்னாள் ராணுவ வீரரான அமல்ராஜ் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர். நாதகவில் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக சீமான் வீட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார் 👉🏼 2010ம் ஆண்டு முதல் லைசன்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளார். எனினும், தனிப்பட்ட பாதுகாப்புக்காக பெறப்பட்ட துப்பாக்கியை, சட்ட விரோதமாக தொழில் ரீதியாக அவர் பயன்படுத்தி வந்ததாக தகவல்

*🛑 "அமீர் வங்கி கணக்கில் பணத்தை செலுத்திய ஜாபர் சாதிக்"* "போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளில் ஜாபர் சாதிக் செலுத்தியுள்ளார்" சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்

*சேலத்தில் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் மையங்களில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு* *சேலம்: சேலத்தில் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் மையங்களில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சேலத்தில் ஸ்கேன் சென்டர் நடத்தி பாலினம் தெரிவித்த விவகாரத்தில் 9 பேர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என கண்டறிய ரூ.15,000 முதல் ரூ.25,000 வசூலிக்கப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.*

*🛡️Appointment Of Chief Justice* ♟️From 1950 to 1973, the practice has been to appoint the seniormost judge of the Supreme Court as the chief justice of India. ♟️This established convention was violated in 1973 when A.N. Ray was appointed as the Chief Justice of India by superseding three senior judges. ♟️Again in 1977, M.U. Beg was appointed as the chief justice of India by superseding the then senior-most judge. ♟️This discretion of the government was curtailed by the Supreme Court in the Second Judges Case (1993), in which the Supreme Court ruled that the seniormost judge of the Supreme Court should alone be appointed to the office of the chief justice of India.

🚨 *UPDATE* இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள், இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்! தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!

*கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய கிராம கணக்கு என்றால் என்ன* தமிழகத்தை பொறுத்த வரை நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என்றாலே பத்திரபதிவு அலுவலகம் வட்டாசியர் அலுவலகம் தான் என்று பெரும்பாலான மக்கள் மனதில் நினைவுக்கு வருகிறது. ஆனால் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என்றாலே முதலில் எந்த ஒரு மக்களுக்கும நினைவுக்கு வர வேண்டிய அலுவலகம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளாக பல அரசுகளால் பல முடிசூடா மன்னர்களின் ராஜ்ஜியங்களால் இஸ்லாமிய பேரரசுகளால்,ஆங்கிலேயர் ஏகாதிபத்தித்தால் நமது தமிழக மண் ஆளப்பட்டு பல்வேறு தரப்பினர்களுக்கு பல்வேறு வகையில் உரிமையாகி இந்த நிலங்கள் ஆளப்பட்டு வந்தது. ஆனால் 1980 களில் மேற்படி நிலங்கள் எல்லாம் இறுதியாக யார் கையில் இருக்கிறதா இதனை விரிவாக தொகுத்து நில உடைமை மேம்பட்டு திட்ட ஆவணமாக உருவாக்கி இந்த ஆவணங்கள் கிராம நிர்வாக அதிகாரி அலுவலர் மூலம் பாரமரித்து சரிபார்த்து பாதுகாத்து வருகின்றனர். உதாரணமாக வங்கிகளில் கணினி (அ) கம்ப்யூட்டர் காலத்திற்கு முன் கம்ப்யூட்டர் காலத்திற்கு பின் என்று அனைத்து MANUAL ரெகார்டுகளையும் சரிபார்த்து அதனை இறுதி மற்றும் சரியான தகவல்களை கம்ப்யூட்டரில் ஏற்றி வைப்பார்கள். அதன் பிறகு வருகின்ற எல்லா அலுவகங்களில் வேலைகளும் மேற்படி ஆவணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுவார்கள் . அதே போல் தான் நில உடைமை மேம்பாட்டு திட்டத்திற்கு முன்பு இருகின்ற அனைத்து ஆவணங்களையும் ஒழுங்குப் படுத்தி சீர் செய்து அதனை இறுதி ஆவணமாக அதாவது – யு . டி .ஆர் நில உடைமை மேம்பாட்டு திட்ட ஆவணமாக உருவாக்கி நடைமுறையில் கிராம நிர்வாக அலுவலகம் மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேற்படி கிராம நிர்வாக அலுவலகங்களில் கிராம கணக்குள் 24 இருக்கிறது. இதை 28 லச்சராக பிரித்து உள்ளது. இந்த 24ம் தெரிந்தால் ஓட்டு மொத்த தமிழகத்தின் நில நிர்வாகம் பற்றி புரிந்து விடும். *அந்த 24 கிராம கணக்குள் பற்றி விளக்கம் பின்வருமாறு* வ.எண்.1. கிராம கணக்குள்.எண். அ. பதிவேடு. வ.எண்.2. கிராம கணக்கு எண்.1 (சாகுபடி பற்றியது) வ.எண்.3. கிராம கணக்கு எண்.1A (அறுவடை பற்றியது) வ.எண்.4. கிராம கணக்கு எண்.2 (அடங்கல் பற்றியது) வ.எண்.5. கிராம கணக்கு எண்.2C (மரங்களை பற்றியது) வ.எண்.6. கிராம கணக்கு எண்.2D (பாசன வசதிகளை பற்றியது) வ.எண்.7. கிராம கணக்கு எண்.2F (கிராம தரிசு நிலங்களை பற்றியது) வ.எண்.8. கிராம கணக்கு எண்.3 (பட்டா பற்றியது வ.எண்.9. கிராம கணக்கு எண்.3A (பட்டா மற்றிதல் பற்றியது) வ.எண்.10. கிராம கணக்கு எண். 4 (நில கழிவுகள் பற்றியது) வ.எண்.11. கிராம கணக்கு எண் 5 (நில வரி பற்றியது) வ.எண்.12. கிராம கணக்கு எண் 6 (தண்ணீர் தீர்வை பற்றியது) வ.எண்.13. கிராம கணக்கு எண் 7 (நில ஆக்கிரமிப்பு பற்றியது) வ.எண்.14. கிராம கணக்கு எண் 8 (நீர் பாசன நிலங்களில் கிடைக்க கூடிய மொத்த வருவாய் பற்றியது ) வ.எண்.15. கிராம கணக்கு எண் 9 (நீர் பாசனம் பற்றியது) வ.எண்.16. கிராம கணக்கு எண் 10 ( சிட்டா பற்றியது) வ.எண்.17. கிராம கணக்கு எண் 11 (பட்டா வடிவம்பற்றியது) வ.எண்.18. கிராம கணக்கு எண் 12 (நில தொகை பற்றியது) வ.எண்.19. கிராம கணக்கு எண் 13 (தினசரி வசூல் பற்றியது) வ.எண்.20. கிராம கணக்கு எண் 14 (அபராத தொகை பற்றியது) வ.எண்.21. கிராம கணக்கு எண் 15 ( அரசு கருவுல பணம் செலுத்தும் விபரம் பற்றியது) வ.எண்.22. கிராம கணக்கு எண் 16 (நிலுவை தொகை பற்றியது) வ.எண்.23. கிராம கணக்கு எண் 17 (தண்ட தொகை பற்றியது) வ.எண்.24. கிராம கணக்கு எண் 18 (ரசீது சம்பந்தப்பட்டது) வ.எண்.25. கிராம கணக்கு எண் 19 (பிறப்பி இறப்பு சம்பந்தப்பட்டது) வ.எண்.26. கிராம கணக்கு எண் 2௦ (மலை பற்றிய விவரம்) வ.எண்.27. கிராம கணக்கு எண் 21 (கால் நடை பற்றியது ) வ.எண்.28 கிராம கணக்கு எண் 22 (கூட்டு பட்டா பற்றியது) மேற்ண்ட 28 லெட்ஜரை சில கணிணி மயமான பிறகு அரசு பராமரிக்க வேண்டாம் என அறிவித்துள்ளது…அவை பின்வருமாறு சாகுபடி(Cultivation) பற்றிய மாதாந்திர பதிவேடு (Monthly Register) அடங்கல் பதிவேட்டின கணினி மயம உடன் இக்கணக்கை நீக்கலாம் 1.ஏ சாகுபடி செய்யப்பட்ட பயிர்களின் பரப்பையும், விளைச்சல் மதிப்பையும் பற்றிய சுருக்கமான விவரப்பட்டி. அடங்கல் பதிவேட்டின கணினி மயம உடன் இக்கணக் நீக்கலாம். 2டி. கிராமத்தில் சில பாய்ச்சல் ஆதாரங்களின் கீழ் பாய்ச்சப்பட்ட பரப்பில் விவரங்களை காட்டும் விவரப்பட்டி இக்கணக்குக விவரங்கள் க எண் 2 இலும் ம “அ”பதிவேட்டில் சேகரிக்கக் படுவதினால் நீக்கலாம். 2எப். கிராமத்தில் பல்வேறு வகை நில வகுப்புகளின் பரப்புகளைக் காண்பிக்கும் விவரப்பட்டி இக்கணக்குக விவரங்கள் க எண் 2இலும் ம “அ”பதிவேட்ட சேகரிக்கக் படுவதினால் நீக்கலாம். 4அனைத்து வகை அரசிறைக்கழிவுகளைக் காட்டும் விவரப்படி. அத்தகைய அர சிறைகழிவுகள் தற்சமயம் கிராமங்களி செய்யப்படுவதால் எனவே நீக்கலாம் 8 ஏ. I மற்றும் II -|||ஆம் வகுப்பு நீர்ப்பாய்ச்சல் ஆதாரங்களின் கீழ் நீர்ப்பாய்ச்சப்பட்ட நிலங்களைக் காண்பிக்கும் விவரப்படி. இக்கணக்கு “அ” பதிவேட்ட காணப்படுவ இதனை நீக்கலாம் 10சி மற்றும் 10டி. வருவாய் பதிவுகளை மாற்றுவதற்காக (Transfer of Registry) கிராம நிர்வாக அலுவலரால் சமர்ப்பிக்கப்பட்டு வரும் துணைப் பதிவேடு (Subsidiary Register) கிராம கணக்கில் இதன் விவரம் பெறப்படுவதால் இவைகள் நீக்கப்படுகின்றது பலவகை மதிப்புள்ள கைப்பற்றுகளின் எண்ணிக்கையைக் காட்டும் விவரப்பட்டி. இக்கணக்கு, க எண்10(1) கணக்கைசேர்த்து பேண ஆணையிடப்பட்டதால் நீக்கப்படுகிறது.

*சொல்வதைக் கேட்கவில்லை என்றால் ஆதரவு இல்லை - உக்ரைன் அதிபரிடம் நேரடியாக ட்ரம்ப் எச்சரிக்கை* ▪️ ரஷியா உடனான போரில் உக்ரைனுக்கு 3 ஆண்டுகளாக அமெரிக்கா செய்த நிதியுதவிக்கு பதிலாக, உக்ரைனில் உள்ள அரியவகை கனிம வளங்களின் உரிமையை காலவரையில்லாமல் வழங்க ட்ரம்ப் கேட்டுள்ளார் ▪️ போரில் உக்ரைனுக்கு உத்தரவாதம் அளித்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார் என ஸெலன்ஸ்கி தெரிவிக்க, உத்தரவாதம் அளிக்க ட்ரம்ப் மறுப்பு ▪️ இதனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும், மதிய உணவை புறக்கணித்தும் ஸெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் ▪️ ஸெலன்ஸ்கி அமைதியை மீட்க தயாராக இல்லை. அவரது செயல் அவமதிப்பாக உள்ளது. மீண்டும் நான் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளேன் என ட்ரம்ப் கருத்து

சர்ச்சை பேச்சு - ஆட்சியர் பணியிட மாற்றம். மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம்; மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் நியமனம். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான குழந்தை தொடர்பாக பொது வெளியில் சர்ச்சையாக பேசியிருந்த நிலையில் மகாபாரதி ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம்.

*🛑 கிரிப்டோ கரன்சி மோசடியில் நடிகை தமன்னா உள்ளிட்ட பல நடிகைகளிடம் விசாரணை நடத்த புதுச்சேரி போலீஸார் முடிவு...* மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளதா? முதலீட்டு பங்குதாரரா? என விசாரணை தீவிரம்

4*தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம், 2003 - என்ன சொல்கிறது...?* AND தனிநபர் அரசு அனுமதி இல்லாமல் ( License இல்லாமல் ) வட்டி-க்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமா...? அ)கந்துவட்டி :- (Usury) வருடத்திற்கு 18% மேல் வட்டி வசூலிப்பவர்களுக்கு, மூன்றாண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ 30,000 வரை அபதாரமும் (fine) விதிக்கப்படும். ஆ)அதீத வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இரு தரப்பும் குற்றவியல் நீதிமன்றத்தையும் அணுகலாம். கடன் பெற்றவர்களின், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வட்டிக்காரர்கள் அபகரித்திருந்தால், அதனையும் நீதிமன்றமே மீட்டுக்கொடுக்கும். இ)வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முழுநேரத்தொழில் ஆக நடத்துபவர்கள், ‘தமிழ்நாடு மணி லெண்டர்ஸ் ஆக்ட், 1957’ கீழ் தாசில்தாரிடம் லைசென்ஸ் வாங்க வேண்டும். ஈ)ஒருவருக்கோ, சிலருக்கோ பணம் கொடுத்து வட்டி வாங்குவதற்கு, லைசென்ஸ் எடுக்கவேண்டும் என்று அவசியமில்லை. உ)தனி நபர் அரசு அனுமதி இல்லாமல்,லைசென்ஸ் இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமா? அப்படி வட்டிக்குக் கொடுத்தால் என்ன தண்டனை???? வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலமும் தனியாகச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் தமிழ்நாடு 1957-லிருந்து வட்டிக்குப் பணம் கொடுப்பதை நெறிப்படுத்தும் சட்டம் TamilNadu_Money_Lenders_Act, 1957 நடைமுறையில் உள்ளது. அதன்படி வட்டிக்குப் பணம் கொடுப்பதைத் தொழிலாக நடத்துபவர்கள் முறைப்படி தாசில்தாரிடம் அனுமதி பெற்று நடத்தவேண்டும். இது தனி நபர், கூட்டாக பங்குதாரர்களாக நடத்தலாம். ஆனால் இந்தச் சட்டம் வங்கிகளுக்கோ, வட்டிக்குப் பணம் கொடுக்கும் கூட்டுறவு சங்கங்கள், நிதி நிறுவனங்களுக்குப் பொருந்தாது. ஏனென்றால் டெபாசிட் வாங்குவது வட்டிக்குப் பணம் கொடுப்பது என்றால் வங்கி நடைமுறைக்கு கீழ் வருவதால் அதற்கு ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற வேண்டும். நான் டெபாசிட் எதுவும் வாங்கவில்லை, வெறுமனே பணம் மட்டுமே வட்டிக்குக் கொடுத்து வாங்குகிறேன் என்றால் அதற்கு தாசில்தாரிடம் லைசென்ஸ் வாங்க வேண்டும். அடகுக் கடை வைத்திருப்பவர்கள் லைசென்ஸ் வாங்குவது போல் இதற்கும், ‘மணி லெண்டர்ஸ் ஆக்ட் 1957’-ன் கீழ் உள்ள சட்டத்தின் கீழ் லைசென்ஸ் வாங்க வேண்டும். அப்படி இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முழுநேரத் தொழிலாக செய்வது சட்டப்படி குற்றம். ஒரு வித்தியாசம் என்னவென்றால் அதை முழு நேரத் தொழிலாக ஒரு இடத்தில் நிறுவனம் தொடங்கி முழு நேரத் தொழிலாகச் செய்தால் லைசென்ஸ் எடுக்க வேண்டும். ஆனால் ஒரு தனிநபர் யாருமே தனது வாழ்க்கையில் மற்றவர்களிடம் பணம் கொடுத்து வட்டி வாங்குவது நடக்கும். தனது நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு வாழ்க்கையில் பணத் தேவைக்கு உதவும்போது பணம் கொடுத்து வட்டி வாங்குவது வழக்கமாக இருக்கும். அவர்களை முழு நேரத் தொழிலாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. அதில் லைசென்ஸ் எடுக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. ஒருவருக்கோ, சிலருக்கோ உதவி செய்வதை லைசென்ஸ் வாங்கி செய்யவேண்டும் என்று அவசியமில்லை. ஒருவேளை ஒருவர் லைசென்ஸ் எடுக்காமல் தொழிலாகச் செய்தார் என்று புகார் வந்தால் அதற்கு தண்டனை ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்தால் விதிக்கப்படும். சிறைத் தண்டனை எதுவும் இல்லை. இதில் கோடிக்கணக்கில் பணம் வட்டிக்கு கொடுத்திருந்து உரிமம் வாங்கவில்லை என்று குற்றச்சாட்டு வந்தாலும் சட்டம் தொகையைப் பற்றி சொல்லவில்லை. உரிமம் வாங்காமல் வட்டிக்குப் பணம் கொடுத்து தொழில் செய்வதுதான் குற்றம் என்கிறது. ஒருவேளை நடவடிக்கை வந்தால் அதற்கு ரூ.1000 அபராதம் என்பதுதான் சட்ட நடவடிக்கை.