
Vatican News - Tamil
3.0K subscribers
Verified ChannelAbout Vatican News - Tamil
திருத்தந்தை, வத்திக்கான், திருஅவை பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்கான 🇻🇦அதிகாரப்பூர்வ சேனல் . 🇻🇦 https://www.vaticannews.va/ta.html
Similar Channels
Swipe to see more
Posts

*நேர்காணல் - இசை வழியாக இறைப்பணியாற்றுவோம்* "இசைவழி இறைப்பணி" என்னும் அளப்பரிய பணியை, கத்தோலிக்க திரு அவைக்கு, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இருந்தே ஆற்றி வந்த தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு முத்தமிழ் வித்தகர் புலவர் பெருமான் திருமிகு. அய்யாத்துரை பாகவதர் அவர்களின் வழி வந்த நான்காவது தலைமுறையைச் சார்ந்தவர் சென்னையில் வசிக்கும் திருமதி. விமலா. https://www.vaticannews.va/ta/church/news/2025-05/interview-let-s-serve-god-through-music.html.


*கடவுளின் கண்களால் உலகத்தைப் பார்ப்பது இன்றியமையாதது* அமைதி மற்றும் உரையாடலின் கருவியாகத் திகழும் உடன்பிறந்த உணர்வின் பாலங்களைக் கட்டுவோம் – திருத்தந்தை 14-ஆம் லியோ. ஆழமாகக் கற்றல், உரையாடல், ஏழைகளைச் சந்தித்து அவர்களின் குரலுக்கு செவிசாய்த்தல் போன்றவை திருஅவைக்கும் மனித குலத்திற்கும் புதையல் போன்றவை என்றும், விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் ஆகியோரைக் கொண்ட உலகத்தைக் கடவுளின் கண்களால் பார்ப்பது இன்றியமையாதது என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ. https://www.vaticannews.va/ta/pope/news/2025-05/leo-xiv-speech-to-the-centesimus-annus-pro-pontifice-foundation.html


*ரேரும் நோவாரும் திருமடலின் 134-ஆவது ஆண்டு* முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள், அரசு மற்றும் குடிமக்கள் போன்றோருக்கு இடையே நிலவும் உறவுகள், மற்றும் கடமைகள் பற்றி ரேரும் நோவாரும் திருமடலில் விளக்கியுள்ளார் திருத்தந்தை 13-ஆம் லியோ. தொழிலாளர் உரிமைகள் மற்றும், கடமைகள் பற்றி வலியுறுத்தி வரலாற்றில் முத்திரை பதித்த, *‘ரேரும் நோவாரும்’ (Rerum Novarum)* என்ற திருமடல் வெளியிடப்பட்ட 134-ஆவது ஆண்டினை மே 15 வியாழனாகிய இன்று திருஅவை சிறப்பிக்கின்றது. https://www.vaticannews.va/ta/pope/news/2025-05/anniversary-of-the-encyclicals-rerum-novarum-of-pope-leo-xiii.html


*கீழை வழிபாட்டுமுறைத் திருஅவையினருக்கான யூபிலி* மே 14, புதன்கிழமை காலை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கீழை வழிபாட்டுமுறைத் திருஅவையினரைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை 14ஆம் லியோ. https://www.vaticannews.va/ta/pope/news/2025-05/jubilee-for-the-churches-of-the-eastern-riti.html


*பேசுவதை விட செவிமடுப்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கும் திருத்தந்தை* எந்த ஒரு கூட்டத்திற்கு முன்பும், மறைப்பணி நிகழ்வுக்கு முன்னரும், திருநற்கருணையின் முன்பு தனிமையில் அமர்ந்து அதிக நேரம் ஜெபிப்பதை வழக்கமாகக் கொண்ட ஓர் ஆழமான ஆன்மீக மனிதர் நம் புதிய திருத்தந்தை. https://www.vaticannews.va/ta/pope/news/2025-05/india-is-known-to-pope-leo-augustinians-say.html


*கிறிஸ்தவ பள்ளிகளின் சகோதரர்களுடன் திருத்தந்தை 14-ஆம் லியோ* கல்வியின் வழியாக மாணவர்களின் இதயங்களைத் தொட்டு, சிறந்ததைக் கொடுக்கவும், துணிவுடன் ஒவ்வொரு தடையையும் எதிர்கொள்ள அவர்களுக்கு உதவியையும் ஊக்கத்தையும் வழங்க நம்மால் முடியும். https://www.vaticannews.va/ta/pope/news/2025-05/address-of-the-holy-father-to-the-brothers-of-the-christian-scho.html
